இன்றும் நாளையும் எரிவாயு விநியோகம் இல்லை

கொழும்பு, மே 26

எரிவாயு சிலிண்டர் விநியோகம் இன்று (26) மற்றும் நாளை வெள்ளிக்கிழமை (27) ஆகிய இரு தினங்களில் இருக்காது என லிட்ரோ எரிவாயு தெரிவித்துள்ளது.

7,500 மெட்ரிக் டன் கொண்ட இரண்டு எரிவாயுக் கப்பல்கள் தற்போது இலங்கையை நோக்கி பயணிப்பதாகவும், ஒரு கப்பல் வெள்ளிக்கிழமை (27) வரும் என்றும் மற்றைய கப்பல் ஞாயிற்றுக்கிழமை (29) வரும் என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த இரண்டு கப்பல்களுக்கும் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், எரிவாயு சிலிண்டர்கள் விநியோகமானது, கப்பலில் இருந்து எரிவாயு இறக்குமதி செய்யப்பட்ட மறுநாள் முதல் ஆரம்பிக்கப்படும் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முறையற்ற முறையில் எரிவாயுவை சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும், அதிக விலைக்கு எரிவாயுவை வாங்கவோ அல்லது விற்கவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு லிட்ரோ எரிவாயு  நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *