திருகோணமலை முத்துநகர் கிராமத்தில் மழைகாலங்களில் ஜனாஸாக்களை (இறந்த உடல்களை) அடக்கம் செய்வதென்றால் வாய்க்காலில் இரங்கி நீரினை கடந்து உடல்களை பல சிரமத்துடன் சென்று அடக்கம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்துநகர் மையவாடி வீதிக்கு இரண்டு ஹிவும் பைப் வைத்து சுமார் 80 மீட்டர் வீதியினை செப்பனிட்டு தருமாறும் அப்பகுதி பள்ளிவாயல் நிர்வாகம் மற்றும் சங்கங்கள் பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களிடம் எழுத்து மூலமான கோரிக்கையினை முன் வைத்திந்தனர்.
அவ்வீதியினை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் முகம்மட் நௌபர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பட்டிணமும் சூழலும் பிரதேச சபை அனுசரணையுடன் அப் பகுதி சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு மையவாடி வீதி அபிவிருத்தி செய்து கௌரவ உப தவிசாளர் முகம்மட் நௌபரினால் இன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இதன் போது முத்து நகர் கிராமத்தில் உள்ள சங்கங்களின் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

