காட்டு யானை துவம்சத்தால் பாதிப்பு

திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாம் குளம் கிராமத்துக்குள் இரவு (26) காட்டு யானைகள் புகுந்து பலசேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயம், விறகு எடுத்தல், பயிர் செய்தல் முதலான தொழில்களைச் செய்து வருகின்றனர்.

சுமார் 15க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சிறு குடிசை,பாதுகாப்பு வேலி என்பனவற்றையும் இவ்வாறு துவம்சம் செய்துள்ளன.

இரவு இரண்டுக்கும் மேற்பட்ட யானைகள் கிராமத்துக்குள் புகுந்தே இவ்வாறு அட்டகாசம் செய்ததாக மக்கள் கூறுகின்றனர்.

இதனால் நான்கு வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த காய்க்கக் கூடிய நிலையிருந்த தென்னை மரங்கள் வேரோடும், குருத்தோடும் பிடுங்கி அழிக்கப்பட்டுள்ளன

தமது வாழ்வாதாரத் தொழிலாக இதனைச் செய்து வருவதாகக் கூறுகின்றனர். இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஏற்கனவே யானைப் பாதுகாப்பு வேலி போடப்பட்டும் பயன் இல்லையெனவும் கவலை தெரிவித்தனர்.

எனவே உரிய அதிகாரிகள் காட்டு யானைகளின் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *