
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு இரண்டு நாள்கள் விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை -கல்முனை வலயக்கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலையில் தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவர், சமயபாட பரீட்சையை சகோதரனுக்குப் பதிலாக எழுதியதுடன் தனது அடையாள அட்டையின் புகைப்படத்தையும் மாற்றியுள்ளமை தெரியவந்தது.
32 வயதான சகோதரனுக்குப் பதிலாக ஒரு முக தோற்றமுடைய 28 வயதான சகோதரனே இவ்வாறு பரீட்சை எழுதி சிக்கினார்.
சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்து கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே அவர்களுக்கு இரண்டு நாள்கள் விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டது.

