இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கான வயது வரம்பு இரத்து

ரஷ்யாவில் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கான வயது வரம்பு ரஷ்யா செய்யப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள போர் 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருவதால் இந்த போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த போரில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கான வயது வரம்பை ரஷ்யா இரத்து செய்துள்ளது.

ரஷ்ய நாடாளுமன்றத்தில் இன்று இதற்கான சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *