நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் கால்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பம்

நுவரெலியா,மே 26

சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் புதிய இளைய நிர்வாகத்தின் கீழ் இவ் வருடத்தின் முதல் A பிரிவுக்கான முதல் போட்டி வியாழக்கிழமை (26) பிற்பகல் 3.00 மணிக்கு நுவரெலியா மாநகர சபை மைதானத்தில் சர்வதேச பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்தியத்தோடு உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

இந்நிகழ்வில் மாநகர சபையின் முதல்வர் சந்தனலால் கருணாரத்ன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இப் போட்டியில் யங் பேட்ஸ் மற்றும் யங் யுனைடட் ஆகிய அணிகள் மோதிக் கொண்டன.

தொடர்ந்து இவ்வருடத்தின் A B C பிரிவுகளுக்கான அனைத்துப் போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *