
கடந்த வாரத்தில் நாட்டில் 1,576 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இது கடந்த வாரத்தை விட 21.8 வீத அதிகரிப்பு என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அந்த எண்ணிக்கை 409 ஆகும்.
கம்பஹா மாவட்டத்தில் 171 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 157 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 119 பேரும், கண்டி மாவட்டத்தில் 113 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வருடத்தில் 21,484 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

