மே 9 சம்பவம்: இதுவரை 1,878 பேர் கைது, 831 பேர் விளக்கமறியல்

கொழும்பு,மே 26

கொழும்பில் மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை ஆயிரத்து 878 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

புதன்கிழமை மாத்திரம் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 831 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 854 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதேபோன்று குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *