திறைசேரி பிணைமுறிகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

கொழும்பு,மே 26

40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணைமுறிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளன.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டு பிரிவுகளின் கீழ் திறைசேரி பிணைமுறிகள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2025 ஆம் ஆண்டு ஜுன் முதலாம் திகதி முதிர்ச்சியடையும் வகையிலான 15 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணைமுறிகள் வெளியிடப்படவுள்ளன.

மேலும், 2028 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி முதிர்ச்சியடையும் வகையிலான 25 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணைமுறிகள் வெளியிடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *