21 ஆவது அரசியலமைப்பு: விசாரணைகள் இன்று

கொழும்பு, மே 27

21 ஆவது அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுகள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள்  மீதான விசாரணகள் இன்றைய தினமும் (27) முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுகளினதும் சில உள்ளடக்கங்கள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளமையினால் அவற்றை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுமாறு உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கர்னல் அனில் அபேசேகர என்பவரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றத்தில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மனு மீதான விசாரணகள் இன்றைய தினமும்  முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *