கறுப்பு ஜூலை : பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

கறுப்பு ஜூலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கறுப்பு ஜூலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிகோரி நேற்று டவ்னிங் ஸ்ட்ரீட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள் என்றும் இன அழிப்புக்கு நீதி வேண்டும் என பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தொடர்ச்சியாக இன்றும் தமிழர் தாயக பகுதிகளில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட இனவழிப்பு தொடர்பாகவும் அவர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

இதேவேளை தமிழின அழிப்புக்கான நீதி விசாரணைகளின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply