
கொழும்பு, மே 27
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு 3 இலட்சம் யூரோ பெறுமதியுடைய மருந்துகளை பிரான்ஸ் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த மருந்து தொகையை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவர்டு, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லிடம் கையளித்துள்ளார்.
நெருக்கடியான காலத்திற்கு ஏற்ற இந்த அன்பளிப்புக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்