இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீக்கப்பட்டது!

நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கும் அதிகமாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று வெள்ளிக்கிழமை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

நாட்டில் தீவிரமாக பரவியுள்ள கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டது.

எனினும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply