
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது.
மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
76 வயதுடைய ஒருவரும், மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன் உயிரிழந்ததாகவும், மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ள வரவில்லை என கிராம அலுவலகர் வீடு தேடி சென்றபோதே, இருவரும் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
பிற செய்திகள்
- ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு
- அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம்; இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்திற்கு கிடைத்த மகிழ்ச்சித் தகவல்
- இலங்கைக்கு 25 தொன் மருத்துவப் பொருட்களை வழங்கிய இந்தியா!
- எரிபொருளுக்காக மாதாந்தம் செலவிடப்படும் தொகை! – வலுசக்தி அமைச்சர் வெளியிட்ட தகவல்
- விமானப்படை தளபதியை சந்தித்த அமெரிக்கத் தூதுவர்!
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்

