மின்கட்டணம் அதிகரிப்பு

✍ மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை அடுத்தவாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

✍ தற்போதைய நிலைமையில் ஒரு அலகு மின்னுற்பத்திக்கு செலவாகின்ற தொகையை விட குறைந்த தொகையே அலகுக்கான மின்கட்டணமாக அறவிடப்படுகிறது .

✍ இந்த நிலையில் அதனை அதிகரிக்க வேண்டிய நிலைமையில் இருப்பதாக மின்சக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன .

✍ அதேநேரம் அனல் மின்னிலையத்தின் ஊடாக இடம்பெறும் மின்னுற்பத்திக்கு மாதாந்தம் 100 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

✍ எனவே திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சு வைக் கூட்டத்தில் மின்கட்டணம் தொடர்பான தீர்மானம் ஒன்று எடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *