ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட மூவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை

ரிஷாட் பதியுதீனின் மனைவி, சிறுமியை வேலைக்கமர்த்திய தரகர் உள்ளிட்ட மூவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹட்டன், டயகம பிரதேசத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளன நிலையில் ஜூலை 03 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் 12 நாட்களின் பின்னர் குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரழந்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் 2015 மற்றும் 2019 க்கு இடையில் வீட்டு உதவியாளராக பணிபுரிந்த குறித்த சிறுமி, பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து 44 வயதுடைய ரிஷாட் பதியுதீனின் மைத்துனரே பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக விசாரணையில் தெரியவந்தமையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply