கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து ஒக்டோபரில் தீர்மானம்!

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து ஒக்டோபர் மாதம் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரி, குறித்த நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.

இந்நிலையில், குறித்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து ஒக்டோபர் 2021 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவேக்ஸின் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட முதல் தொகுதி தரவுகளை கடந்த ஜுலை மாதம் 6 ஆம் திகதி ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply