கருணாநிதியின் சிலையை இன்று திறந்து வைக்கிறார் வெங்கையா நாயுடு..!

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று திறந்து வைக்கிறார்.

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்ததைத் தொடர்ந்து சிலை அமைக்கும் பணிகள் இடம்பெற்றன.

இந்நிலையில் இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று மாலை கருணாநிதி சிலையை குவெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *