தேடப்பட்ட  சிறுமி சடலமாக மீட்பு!

களுத்துறை – பண்டாரகம , அட்டலுகம பிரதேசத்தில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி சடலமாக மீட்பு.

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி நேற்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு கோழி இறைச்சி வாங்குவதற்காக சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை.

சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸாருக்கு மேலதிகமாக பாணந்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் குறித்த சிறுமியின் சடலம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *