மத்திய வங்கியின் குறுகிய கால நடவடிக்கைகள் சிறப்பானவை! – ஜனாதிபதி பாராட்டு

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மத்திய வங்கி எடுத்துள்ள குறுகிய கால நடவடிக்கைகள் சிறப்பானவை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை மத்திய வங்கி ஆளுநருடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை மத்திய வங்கி சுயாதீனமாக செயற்படுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநரிடம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *