காங்கேசன்துறைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு: டக்ளஸ்

யாழ்ப்பாணம்,மே 28

தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *