அட்டுலுகம சிறுமி உயிரிழந்த சம்பவம்;ஜனாதிபதி இரங்கல்!

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா எனும் குறித்த சிறுமி நேற்று அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு சென்ற நிலையில் வீடு திரும்பாத நிலையில் குறித்த சிறுமி, அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் சதுப்பு நிலமொன்றில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பலரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அட்டலுகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன்.சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள்.என அதில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *