தீவக பகுதியை சேர்ந்த 25 பயணாளிகளுக்கு இரண்டரை லட்சம் பணம் வழங்கிய டக்ளஸ்

யாழ்ப்பாணம்,மே 28

நீர் வேளாண்மையை ஊக்குவித்து கடல் தொழிலாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயல்திட்டத்திற்கு அமைவாக கடலட்டை பண்ணைகள் அமைக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ள தீவக பகுதியை சேர்ந்த சுமார் 25 பயணாளிகளுக்கு தலா இரண்டரை லட்சம் 250,000 வீதம் முதற்கட்ட காசோலை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.

மேற்படி நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் யாழ் அரசாங்க அதிபர் பிரதி அரச அதிபர் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன் வேலனை பிரதேசபை உறுப்பினர் சிவராசா போல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *