தமிழகத்திலிருந்து யாழிற்கு பொருட்கள் இறக்குமதி; டக்ளஸ் நடவடிக்கை!

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை10 மணிக்கு இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தோனந்தா,

நாட்டில் இன்று நிலவும் பொருளாதார சிக்கலில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறிப்பாக வடமாகாண மக்கள் எதிர்கொள்ளும் உணவுப் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை, ஏனைய பொருட்களுக்கான பற்றாக்குறை எவ்வாறு இலகுவாக தீர்த்துக்கொள்ளலாம் என்பதற்காக தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த இறக்குமதி நடவடிக்கையின் காரணமாக எமது மக்கள் இலகுவாகவும் மிகவும் நியாயமான விலையிலும் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை கடற்றொழிலாளர் மற்றும் ஏனைய மக்கள் எதிர்கொள்ளும் பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடி தீர்வுகளையும் முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *