அத்தியாவசிய பொருள்கள் இறக்குமதிக்கு டொலர்கள்

அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக வங்கிகள் ஊடாக டொலர்களை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி இணங்கியுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருள்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்துக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும்  இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்போது, அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்பவர்கள் தங்கள் இறக்குமதிக்காகப் பயன்படுத்திய “விநியோகஸ்தர் கடன் வசதியை” பயன்படுத்துவதை நிறுத்துமாறும் ஆளுநர் இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கு மாற்றாக வர்த்தக வங்கிகள் ஊடாக டொலர்கள் வழங்கப்படவுள்ளது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *