
உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் அமெரிக்க வர்த்தக சபையுடனான சந்திப்பில் உரையாற்றிய உலக வங்கித் தலைவர், ரஷ்ய- உக்ரைன் போர் நிலைமை இதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.
உணவு, எரிசக்தி மற்றும் உரங்களின் விலைகள் கடுமையாக உயர்வதால் உலகப் பொருளாதாரச் சரிவு மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், அவ்வாறானதொரு நிலைமையை தடுப்பது மிகவும் கடினமானது எனவும் உலக வங்கியின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

