மது போதையில் மாமியாரை தாக்கிய மருமகன் கைது

உறங்கிக்கொண்டிருந்த மாமியாரை தாக்கிய மருமகனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு திருகோணமலை-மயிலவெவ பகுதியில் (27) இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாரான எஸ். சுவர்ணலதா நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மது போதையில் வீட்டுக்கு வந்த மருமகன் உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை பொல்லால் அடித்து தாக்கியுள்ளார்.

குடும்பத்தகராறு காரணமாக மாமியார் தனிமையாக ஒரு வீட்டில் வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இவ்வாற தாக்குதலை மேற்கொண்டவர் 33 வயதுடைய சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் ஒருவரே என
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *