யாழ். ஸ்ரீ நாகவிகாரை சர்வதேச பௌத்த நிலையத்தில் இன்று விசேட பூஜை!

யாழ்ப்பாணம், ஸ்ரீ நாகவிகாரை சர்வதேச பௌத்த நிலையத்தில் இன்று விசேட பூஜையும் இரத்தினசூத்திர பாராயனமும் இடம்பெற்றுள்ளது.

கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களுக்காவும், கொரோனாத் தொற்றாளர்களைப் பாதுபாப்பதற்காகவும் தியாகங்களைச் செய்கின்ற வைத்தியசாலைப் பணிப்பாளர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், பொதுசுகாதார மேலதிகாரிகள், பொதுசுகாதார அதிகாரிகள் ஆகியோருக்கு இந்து பௌத்த இறை ஆசிவேண்டி விசேட பூஜையும் இரத்தினசூத்திர பாராயனமும் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், ஸ்ரீ நாகவிகாரை சர்வதேச பௌத்த நிலையத்தில் இன்று காலை 09.30 மணியளவில் இப்பூசை இடம்பற்றுள்ளது.

யாழ் இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் செயலாளரும் யாழ் நண்பர்கள் அமைப்பின் தலைவருமான கலாநிதி சிதம்பரம் மோகனின் ஏற்பாட்டில் இப் பூசை நடைபெற்றுள்ளது.

மேலும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இப் பூசை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply