அட்டுலுகம சிறுமி கொலை குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: ஜனாதிபதி உறுதி

அட்டுலுகம,மே 29

அட்டுலுகம பிரதேசத்தை சேர்ந்த அப்பாவி சிறுமியை கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர குற்றத்தை புரிந்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, நீதியை செயற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

9 வயதுடைய ஆயிஷா வெள்ளிக்கிழமை காலை முதல் காணாமல் போயிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமி வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு கொண்டுவந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *