மலையகத்தில் அதிகரிக்கும் குளவித் தாக்குதல்: இன்றும் ஐவர் பாதிப்பு!

பசறை, கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலை மலை துப்புரவு செய்துகொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் ஐவர் குளவிக்கொட்டுக்குக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளில் குளவிக்கொட்டு சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன.

இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அண்மையில் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

எனினும், குளவிக்கூடுகளை அகற்றி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை எனத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply