
கொழும்பு,மே 29
ஞாயிற்றுக்கிழமை சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிவாயு விநியோகத்தை திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 26ஆம் திகதி இலங்கையை வந்தடையவிருந்த மூவாயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் தாமதமடைந்தது.
எனவே, எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களைக் கோரியுள்ளது.
இதேவேளை, எரிவாயு அடங்கிய இரண்டு கப்பல்கள் எதிர்வரும் முதலாம் மற்றும் 5ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

