ரஞ்சனை பார்வையிட சிறைச்சாலைக்கு செல்லும் நீதியமைச்சர்!

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ச அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை நேரில் சந்தித்து அவரது தேவைகள் குறித்து கேட்டறிந்து கொள்வது இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இலங்கையின் முன்னணி கலைஞர்கள் பலரும் கூட்டாக இணைந்து ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சர் விஜேதாசவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அந்தக் கோரிக்கைக்கு அமைவாக ரஞ்சன் விடுதலை தொடர்பில் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் நீதியமைச்சர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *