பொது சேவைகளை…

<!–

Athavan News

பொது சேவைகளை வழமை போல முன்னெடுப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையுடன் நீக்கப்பட்டது.

இதனையடுத்து, அரச சேவைகளை வழமைபோல முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயேஈ இதற்கான சுற்று நிருபம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய,

  • அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ஆளணியினரை அடையாளம் கண்டு, கடமைக்கு அழைக்கப்பட வேண்டும்
  • அவ்வாறு ஊழியர்களைச் சேவைக்கு அழைக்கும் அதிகாரம் நிறுவன பிரதானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • உத்தியோகப்பூர்வ வாகனங்களைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு மேற்படி நியதி பொருந்தாது
  • அவர்கள் வழமை போலக் கடமைக்குச் சமுகமளிக்க முடியும்
  • ஷஇவ்வாறு கடமைகளுக்கு அழைக்கப்படும் அதிகாரிகளைத் தவிர்ந்த மற்றைய அனைவரும் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்ற வேண்டும்
  • கடமைகளுக்காக அலுவலகத்துக்கு அழைக்கப்படும் ஊழியர்கள் பணியல்லா நாட்களில் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்ற வேண்டும்
  • இவ்வாறு கடமைக்கு அழைக்கப்படும் அதிகாரிகள் மற்றும் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்றும் ஊழியர்களுக்கான வசதிகள் வழங்குதல் மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களின்போது வேறு இடங்களில் கடமையாற்ற தற்காலிகமாக வாய்ப்பளிக்கும் அதிகாரம் அமைச்சின் செயலாளர் மற்றும் நிறுவன பிரதானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், விசேட நோய் நிலைமைகளைக் கொண்டவர்களைக் கடமைக்கு அழைக்க வேண்டாம்
  • அவ்வாறானவர்களின் சேவை கட்டாயம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவர்கள் கடமைக்குச் சமுகமளிக்கவும்
  • வீடு செல்லவும் விசேட கால எல்லை மற்றும் வசதிகளை வழங்க நிறுவனத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *