இராணுவத்தின் 72ஆவது வருட நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள்

இராணுவத்தின் 72 வது வருட நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வமத வழிபாடுகளின் ஓர் அங்கமாக இராணுவத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஆசி வேண்டும் கிறிஸ்தவ மத வழிபாடுகள் பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சஷேந்திர சில்வா கலந்துகொண்டார்.

இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர மற்றும் அதன் உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், பூஜை மற்றும் ஆராதணைகள் வண.பேராசிரியர் அண்டனியின் தலைமையில் இடம்பெற்றன.

மேலும், இயேசுவின் மகத்துவத்தையும் அவருடைய தெய்வீக ஆசீர்வாதங்களையும் பற்றி பேசும் அறிமுகத்திற்குப் பிறகு இராணுவ கிறிஸ்தவ சங்கம் ஏற்பாடு செய்த சிறப்பு நன்றி வழங்கும் விழா நடைபெற்றது.

இதன்பின்னர் இராணுவத் தளபதி மற்றும் அனைத்து சேவை உறுப்பினர்கள், இராணுவக் கொடி மற்றும் அனைத்து படைப்பிரிவுக் கொடிகள் மீதும் படையினர் மரியாதையுடன் உள்ளே அழைத்து வந்து புனிதப் பகுதியில் உள்ள பலிபீடத்தின் அடிவாரத்தில் ஆசி வழங்கப்பட்டது.

இதேவேளை போர்க்களங்களிலும் ஏனைய இடங்களிலும் இறந்த அனைத்து போர்வீரர்களின் சாந்திக்கான பிராத்தனைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply