மலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்

நுவரெலியா- ஹற்றன் பகுதியில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

ஈரோஸ் அமைப்பின் ஏற்பாட்டில் ஹற்றன் புட்சிட்டிக்கு முன்பாக காலை 11 மணியளவில்  இந்த போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டது.

அதன்பின்னர் பேரணியாக ஹற்றன் நகரத்திலுள்ள மணிகூட்டு கோபுரத்துக்கு முன்பாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்கள், சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள்,  சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *