3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் இன்று கொழும்பினை வந்தடைகின்றது!

3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் இன்று கொழும்பினை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் 1 மணிக்கு இந்த கப்பல் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் நேற்று ஏழாவது நாளாகவும் வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை.

இதற்கு மாற்று வழியாக, மண்ணெண்ணெய் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் தற்போது பொதுமக்களுக்கு இல்லாமல் போயுள்ளது.

இதன் காரணமாக நகர் பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *