புதிய திருத்தத்தினூடாக நிறைவேற்றதிகாரம் முற்று முழுதாக ஒழிக்கப்பட வேண்டும்- சாணக்கியன் கோரிக்கை!

திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் உயிரிழந்த உறுப்பினர்களின் ஒரு வருட நினைவையொட்டிய இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,

 நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும். இதனையே உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியமும் விரும்புகிறது இல்லாது  போனால் பொருளாதாரத்தை சீர் செய்ய முடியாது .

ஜனாதிபதி உடன் பதவி விலகி மக்கள் ஆணை மூலமான அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதையே மக்களும் விரும்புவதுடன் கோட்டா ஹோ ஹோம் என்றும் கூறி வருகிறார்கள்.

19 ஆவது திருத்தம் இலகுவாக்கப்பட்டது 21 ம் திருத்தம் மூலமாக நிறைவேற்றதிகாரம் முற்று முழுதாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே சிறந்தது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *