அம்பாறை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் 16 வயதுடைய சிறுமி மாயம் – பொலிஸ் தீவிர விசாரணை!

அம்பாறை – கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் காணாமல்போன சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.30 மணியிலிருந்து குறித்த சிறுமி மாயமாகி உள்ளதாக பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமி பலரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த பாடசாலையில் பாதுகாப்பிற்காக நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

மேலும் இச்சம்பவத்தில் 16 வயதுடைய வதுர்தீன் பாத்திமா சஜானா என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *