அம்பாறையில் சர்வேதச சிறுவர் தின நிகழ்வு!

ர்வேதச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு சுகாதார வழிமுறைக்கமைவாக சொறிக்கல்முனை 6 ஆம் கொளனி மிலேனியம் பாலர் பாடசாலையில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு, சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் மீராமுகையதீன் அஸ்ரப் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பாலர் பாடசாலை மாணவர்களுக்கு உணவு, பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் மீராமுகையதீன் அஸ்ரப் உரை நிகழ்த்தும் போது,

பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். தற்போது எதிர்காலம் மோசமான நிலையில் சென்று கொண்டு இருக்கின்றது. படிப்புகளில் சிறுவர்கள் கவனம் செலுத்துவதும் குறைவடைந்துள்ளது. மதுபோதை மற்றும் தொலைபேசி பாவிப்பதில் சிறுவர்கள் ஈடுபட்டுகிறார்கள்.

மேலும், சிறுவர்களுக்கென அரசாங்கத்தால் பாதுகாப்பு சபை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதை விட ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் சிறுவர்களுக்கென பிரிவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனூடாக சிறுவர்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற முடியும் எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், சவளக்கடை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எம். ஜவ்பர் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி ரேகா சார்ஜன்ட் ஜெயசுந்தர மற்றும் சொறிக்கல்முனை கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.ஜெயப்பிரசன்னா உட்பட ஆசிரியர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *