எரிவாயு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

நாளை மறுதினம் முதல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் எனவும் குறித்த நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

இதன் காரணமாக இன்றும் நாளையும் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *