திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டியால் பதற்றம்

வவுனியா,மே 30

வவுனியா புகையிரத நிலைய வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று இன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனையடுத்து, அங்கிருந்தவர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்ட நிலையில், பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருந்தது.

குறித்த தீ விபத்து காரணமாக முச்சக்கர வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *