இலங்கையிலுள்ள பிலிப்பினியர்களை வெளியேற்ற தயாராகும் பிலிப்பைன்ஸ்

கொழும்பு,மே 30

பிலிப்பைன்ஸ் பிரஜைகளை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு பிலிப்பைன்ஸ் வெளிவிவகாரத் திணைக்களம் தயாராகி வருகிறது.

இலங்கையில் நூற்றுக்கணக்கான பிலிப்பைன்ஸ் பிரஜைகள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தனது பிரஜைகளை வெளியேற்றுவதற்கு பிலிப்பைன்ஸ் முயற்கிக்கிறது.

டாக்காவிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் மற்றும் கொழும்பிலுள்ள பிலிப்பைன்ஸ் கொன்சுலர் அலுவலகம் ஆகியவற்றின் மூலம், இலங்கையின் நிலையை பிலிப்பைன்ஸ் வெளிவிவகாரத் திணைக்களம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிலிப்பைன்ஸின் வெளிவிவகார உதவிச் செயலளார் சாரா லோ அரியோலா தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் வெளிவிவகார செயலாளர் தியோடோரோ லொக்சின் ஜூனியர்
பிலிப்பைன்ஸ் வெளிவிவகார செயலாளர் தியோடோரோ லொக்சின் ஜூனியர் இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் வெளிட்ட பதிவொன்றில், “சாரா, அவர்களை நாட்டுக்கு அழைத்து வாருங்கள். எம்மிடம் பணம் உள்ளது”  எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள பிலிப்பீனியர்கள் 1094 114322267; 1094 114322268; 1094 112307162 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலமும்  [email protected]  அல்லது  [email protected] ஆகிய மின்னஞ்சல்கள் மூலம் கொழும்பிலுள்ள பிலிப்பைன்ஸ் கொன்சுலர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *