
கடந்த மே 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் தலையீடுகள் எதுவும் ஏற்படாத வகையில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்
இந்நிலையில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் 14 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக டி.ஜே.பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

