21ஆவது திருத்தம் குறித்த கலந்துரையாடல் – SLFP மற்றும் SLPP உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மல்வத்தை மகா சங்க சபைக்கு அறிவித்துள்ளார்.

நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ நேற்று அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உண்மைகளை தெளிவுபடுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *