ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

பண்டாரகம – அதுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேகநபர் கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறுமியின் மரணம் தொடர்பாக பல வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை விசாரணைகள் பாணந்துறை வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றன.

இந்தப் பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் (28) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *