பண்டாரகம –…

பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் கீரைத் தோட்ட தொழிலாளர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *