யாழ்.அரியாலை பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்,மே 30

யாழ் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சற்றுமுன் அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தண்டவாளப் பகுதியை கடக்க முற்பட்ட இளைஞனை யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் அரியாலை நாவலடியில் வசித்துவரும் 30 வயதுடைய மரியதாஸ் அரவிந்தன் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *