
இந்தோனேசியா,மே 30
இந்தோனேஷியாவில் 42 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், 31 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், காணாமல் போன 11 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சுலாவேசி மாகாணத்தின் தலைநகரான மகஸ்ஸரில் இருந்து சென்ற படகு எரிபொருள் தீர்ந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கடலில் தத்தளித்த 31 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 11 பேரை தேடும் பணியில் இந்தோனேசியா விமானப் படை ஹெலிகாப்டர்களுடன் 2 மோட்டார் படகுகள் மற்றும் மீட்பு படகுகள் ஈடுபட்டுள்ளன.
மீட்கப்பட்டவர்கள் தற்போது வீடு திரும்பியுள்ளதோடு, அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகிற்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையில், படகு ஓட்டியவர் மற்றும் உரிமையாளர் இருவரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

