
இந்தியா- தமிழகத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் இன்று யாழை வந்தடைந்ததோடு அவற்றை விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.
இன்று காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்த நிவாரணப் பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் சம்பிரதாயபூர்வமாக நிவாரணப் பொதியை யாழ்.மாவட்டச்செயலர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் கையளித்தார்.
மேலும் நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், பிரதேச செயலர்கள், கிராம அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

