புதுத்தம்பதிகளின் விநோத ஊர்வலம்!(படங்கள் இணைப்பு)

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்குரஸ்ஸ மாரம்ப பிரதேசத்தை சேர்ந்த இளம் புதுமணத் தம்பதியினர் தமது திருமண வைபவ பயணத்திற்காக இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இதுதொடர்பில் புதுமணத் தம்பதிகள் கருத்து தெரிவிக்கையில் தற்போதைய எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

அதேவேளை திருமண விழா மண்டபத்தில் வைபவம் இடம்பெற்றதுடன் அடக்கமாகவும் செலவைக் குறைத்து திட்டமிடப்பட்டதாககவும் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *